பத்தினிப் பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு !
நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் மூன்றும், பாவகையிலும் பிற
திறங்களிலும் பெரிதும் ஒப்புமை உடையன. குறுந்தொகைப் பாடல்களின் சிற்றெல்லை 4 அடி; பேரெல்லை 8 அடி. நீண்ட பாடல்கள் அடங்கிய அகநானூற்றை “நெடுந்தொகை” என்று குறித்தல் போல, அகவற்பாவின் அமைப்பில் சுருங்கிய அடி வரையறையைக் கொண்ட பாடல் தொகுதி “குறுந்தொகை” என்று பெயர் பெறுவதாயிற்று !
குறுந்தொகையில், இறைவணக்கப் பாடலைத் தவிர்த்து 400 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை ஏறத்தாழ 205 புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர். இந்நூலின்கண் உள்ள பழமொழிகளும் உவமைகளும் மிக்க நயமுடையவை. உள்ளத்தை உருக்கும் அகப்பொருட் செய்திகள் பல இக் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன !
பத்தினிப் பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்னும் அரிய செய்தியை எடுத்துக் கூறும் “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ...” என்னும் இறையனார் செய்யுள் இந்நூலில்தான் உள்ளது !
“அகவன் மகளே ! அகவன் மகளே ! மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல், அகவன் மகளே ! பாடுக பாட்டே !...” என்னும் ஔவையாரின் பாடலும் இந்நூலில்தான் இடம் பெற்றுள்ளது !
“கவிஞர் வைரமுத்துவால் அடிக்கடி எடுத்துக் கையாளைப் பெறும் “யாயும் ஞாயும் யார் ஆகியரோ ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?....” என்னும் செம்புலப் பெயல் நீராரின் பாடலும் இந்நூலில் தான் மலர்ந்து மணம் பரப்பி நிற்கிறது.
“பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே !
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து,
படிவ உண்டிப் பார்ப்பன மகனே !’
என்னும் வியப்பு ஏற்படுத்தும் பாடலும் (156) குறுந்தொகையில் தான் இடம்பெற்றுள்ளது !
அருமையான அகவற்பாக்கள் பூத்துக் குலுங்கும் குறுந்தொகை என்னும் இத்தோட்டத்தில் பல ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ப் பொருள் அல்லது இணைப் பொருள் அல்லது புனைப் பொருள் தரும் அழகிய தமிழ்ச் சொற்கள் நிரம்பவே பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை மட்டும் காண்போமா !
--------------------------------------------------------------------------------------
MY
MOTHER................= யாய் (குறு.9.1)
ANVIL............................=
உலைக்கல் (குறு.12.2)
YOUTH..........................=
விடலை (குறு.15.5)
GO-DOWN.....................=
பொதியில் (குறு.15.2)
CREASE
(Cricket)..........= ஆடுகளம் (குறு.31.4)
YOUR
MOTHER............= ஞாய் (குறு.40.1)
PORTICO.......................=
முன்றில் (குறு.41.4)
STAR..............................=
மீன் (குறு.44.3)
DUMB.............................=
ஊமன் (குறு.58.4)
MATERNITY
HOME.......= ஈனில் (குறு.85.3)
POND (குளம்)...............= இலஞ்சி (குறு.91.2)
BOTTLE..........................=
மணிக்கலம் (குறு.193.1)
RICE (சோறு)................= அமலை (குறு.277.2)
THERMOS
FLASK..........= சேமச்செப்பு (குறு277.5)
DRIVER...........................=
வலவர் (குறு.311.2)
DEWY SEASON............. = அற்சிரம் (முன்பனிக்காலம்) (குறு.82.6)
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் இலக்கியம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை)
19]
{02-05-2022}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக